தேசிய செய்திகள்

உரம் வாங்க 2 நாள் வரிசையில் காத்து நின்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் உரம் வாங்க 2 நாள் வரிசையில் நின்ற விவசாயி மயங்கி சரிந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், விவசாயி போகிலால் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தினத்தந்தி

உத்தரபிரதேசத்தில் உரத்தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இதனால் உரக்கடைகளில் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருந்து உரம் வாங்கி செல்கின்றனர். இதனால் உரக்கடைகளில் நீண்ட வரிசை காணப்படுகிறது.அந்தவகையில் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த போகிலால் பால் (வயது 55) என்ற விவசாயி அங்குள்ள ஜக்லான் பகுதியில் உள்ள உரக்கடையில் உரம் வாங்குவதற்காக நேற்று முன்தினம் சென்றார். அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது.

இதனால் நேற்று முன்தினம் அவரால் உரம் வாங்க முடியவில்லை. எனேவ இரவில் கடைக்கு வெளியிலேயே தூங்கினார். பின்னர் நேற்று மீண்டும் வரிசையில் நின்றார்.காலை 9.30 மணியளவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கேயே அவர் மயங்கி சரிந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விவசாயி போகிலால் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசை சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். சுதந்திர இந்திய வரலாற்றில் இதுபோன்ற துயரங்கள் மற்றும் அவமானங்களை விவசாயிகள் ஒருபோதும் அனுபவிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?