தேசிய செய்திகள்

அரியானாவில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்

சூரியகாந்தி விதைகளுக்கு குறந்தபட்ச ஆதார விலை வழங்க கோரி அரியானா மாநிலம் குருஷேத்ராவில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கவுகாத்தி,

அரியானா மாநிலத்தில் அதிக அளவிலான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசு கெள்முதல் செய்யும் சூரிய காந்தி வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கேரி கடந்த 6ஆம் தேதி அரியானாவில் சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் இதனை கண்டித்தும் சூரியகாந்தி விதைகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்கக் கேரியும் அரியானாவில் விவசாயிகள் மீண்டும் தெடர்பேராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். சூரியகாந்தி விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் நடந்து வரும் இப்பேராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், டெல்லி அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான விவசாயிகள் ஒன்று கூடியதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு