தேசிய செய்திகள்

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம்- ராகேஷ் டிக்கைட்

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறியுள்ளார்.

புதுடெல்லி

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் டெல்லியை விட்டு வெளியேறமாட்டார்கள் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் போராடி வருகின்றனர். கடும் குளிர், வெயில், கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் 6 மாதங்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று விவசாயிகள் கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், மத்திய அரசு இந்த போராட்டத்தை டெல்லியில் இருந்து அரியானாவுக்கு மாற்ற முயற்சிக்கிறது. ஆனால் இதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அரசு அதனுடைய சூழ்ச்சியில் வெற்றிபெற விடமாட்டோம்.

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறியுள்ளார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு