தேசிய செய்திகள்

மைசூருவில் மெழுகுவர்த்தி ஏந்தி இரவிலும் விவசாயிகள் போராட்டம்

காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மைசூருவில் மெழுகுவர்த்தி ஏந்தி இரவிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

மைசூரு

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகத்தில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் நேற்று முன்தினம் கர்நாடகம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.

மைசூருவிலும் முழுஅடைப்பு போராட்டம் வற்றி அடைந்தது. மைசூரு நகரில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவிலும் காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் முன்பு விவசாயிகள் மெழுகுவர்த்தியை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

அப்போது தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்