தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் வெற்றி பெறுவார்கள்; சோனியா காந்தி நம்பிக்கை

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் வெற்றி பெறுவார்கள் என்று சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று தனது வீடியோ உரையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்த கொரோனா காலத்திலும் விவசாயிகள், நாட்டுக்கு அசாதாரண சேவை செய்தனர். அவர்களால்தான் ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்க முடிகிறது. அத்தகைய விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் வகையில், 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

தேசத்தந்தை மகாத்மா மற்றும் ஜெய் ஜவான் ஜெய் கிசான் கோஷத்தை அளித்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை நாம் கொண்டாடி கொண்டு இருக்கும்போது, விவசாயிகளும், தொழிலாளர்களும் மத்திய அரசின் 3 கருப்பு சட்டங்களுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.

அவர்களை மோடி அரசு அழவைத்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கான அந்த சட்டங்களை விவசாயிகளிடம் கலந்தாலோசிக்காமல், மோடி அரசு கொண்டு வந்துள்ளது.

தன்னுடைய சில நண்பர்களிடம் மட்டும் ஆலோசித்து விட்டு கொண்டு வந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மக்கள் ஒப்புதலுடன்தான் ஒவ்வொரு சட்டமும் கொண்டுவரப்பட்டது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் தொடர்ந்து போராடும். இந்த போராட்டத்தில் விவசாயிகள் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை