தேசிய செய்திகள்

பரூக் அப்துல்லா வீட்டைவிட்டு வெளியேறத் தடை? கட்சி நிர்வாகிகள் புகார்

தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ராத்பால் மசூதியில் மிலாது நபி திருநாளான இன்று சிறப்புத் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்று நடக்கும் சிறப்புத் தொழுகையில் தேசிய மாநாட்டுக் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியினரும், மக்களும் திரளாகப் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தொழுகைக்கு தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் டுவிட்டர் பதிவில், ''தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவைத் தொழுகைக்கு வெளியேறவிடாமல் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வீட்டிலேயே தடுத்து வைத்துள்ளது. அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமையைப் பறிப்பதை ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. அதிலும் குறிப்பாக மிலாது நபி திருநாளில் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கிறார்கள்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பரூக் அப்துல்லா வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா என்று அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, எந்த பதிலும் கிடைக்கவில்லை.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு