திரிபுராவில் பலிபரா நகரில் வசித்து வந்தவர் சுவாதின் திரிபுரா (வயது 35). இவரது மகன் அபி திரிபுரா. 3 மாத குழந்தை.
இந்நிலையில், திரிபுரா தனது மனைவியுடன் குடும்ப விவகாரம் ஒன்றை பற்றி பேசியதில் அது முற்றி வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் திரிபுரா சத்தம் போட்டு கொண்டு இருந்துள்ளார். அவர்களது குழந்தையான அபி அருகிலிருந்த அறையில் அழுது கொண்டிருந்தது.
உடனே, அங்கு சென்ற திரிபுரா தனது மகன் அபியை தலையை பிடித்து தூக்கி தரையில் எறிந்துள்ளார்.
அந்த குழந்தை உடனடியாக அழுகையை நிறுத்தியது. உணர்ச்சியற்ற நிலைக்கு சென்ற அதன் மூக்கில் இருந்து இரத்தம் கசிய தொடங்கியது. அதன்பின் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டது என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 3 மாத குழந்தையை கொன்ற திரிபுரா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.