தேசிய செய்திகள்

4 வருடங்களாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

ஷிமோகா அருகே 4 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு

கர்நாடக மாநிலம் ஷிமோகா தாலுகாவுக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோணப்பா (வயது45). இவர் தனது மனைவிக்கு தெரியாமல் மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தந்தை கொடுத்து வரும் பாலில் தொல்லையை வெளியே செல்வதற்கு பயந்துபோய் 3 ஆண்டுகளாக மறைத்து வந்துள்ளார்.

ஒரு சமயத்தில் தந்தையின் கொடுமையை தாங்க முடியாமல் தாயிடம் உண்மையை தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக கோணப்பாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் இருவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தாயும்,மகளும் தற்கொலை செய்ய முடிவையும் எடுத்துள்ளனர்.

இந்த அரக்கனிடம் இருந்து தனது மகளை காப்பாற்ற எண்ணிய தாய், தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு எடுத்துள்ளார். இந்த உண்மை அறிந்த கோணப்பா, திருமணம் ஆனாலும் உன்னைவிட மாட்டேன் என்று கூறி பயமுறுத்தி உள்ளார். பயந்து போன கோணப்பாவின் மனைவி தனது குடும்பத்தினருக்கு இதுபற்றிய தகவலை தெரிவித்தார்.

கோபம் கொண்ட உறவினர்கள் கோவிந்தாபுரம் வந்து கிராம மக்களின் உதவியுடன் கோணப்பா அடித்து உதைத்து ஷிமோகா மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு