புதுடெல்லி,
மத்திய மந்திரிசபை முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய மந்திரிசபையில் எடுக்கப்பட்ட முடிவுகள், விவசாயிகள், தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோரது வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உண்டாக்கும். அபரிமிதமான பலன்களை அளிக்கும்.
குறைந்தபட்ச ஆதார விலை உயர்வால், விவசாயிகளுக்கு அவர்களின் சாகுபடி செலவைப்போல் ஒன்றரை மடங்கு லாபம் கிடைக்கும். விவசாயிகள் செழித்தால் நாடும் செழிக்கும். முதல்முறையாக சாலையோர வியாபாரிகளுக்கு வாழ்வாதார திட்டம் அளிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் பெருமளவு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அவர் கூறியுள்ளார்.