தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மத்திய அரசு அனுமதி

கொரோனா நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா அலையையொட்டிய திருத்தப்பட்ட வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், கொரோனா நோயாளிகள் மத்தியில் அறுவை சிகிச்சைகளை ஆஸ்பத்திரிகள் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன என குறிப்பிட்டார்.

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் சிக்கல்கள் உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று காட்டி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்