தேசிய செய்திகள்

மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 55 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதனிடையே மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்-மந்திரி எடியுரப்பா மற்றும் முன்னாள் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித்துக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு ராஜ்பவனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.