தேசிய செய்திகள்

தீவிரவாதி மரணம் அடைவது கூட எனக்கு வலியை தருகிறது; ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர்

தீவிரவாதி ஒருவர் மரணம் அடைவது கூட எனக்கு வலியை தருகிறது என ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் கூறியுள்ளார்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநராக இருப்பவர் சத்ய பால் மாலிக். இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்பொழுது, ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநராக பொறுப்பேற்றபொழுது, பாதுகாப்பு படையினருக்கு சிறந்த வசதிகளை செய்து தர முயன்றேன்.

அவர்கள் கடுமையான சூழ்நிலைகளிலும் மற்றும் கடும் பனி சூழ்ந்த நிலையிலும் செயல்பட்டனர். அது மிக கடுமையான பணி. அதனை நான் கண்டேன். சிறந்த முறையில் போலீசார் தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்துவதில் இவர்கள் வெற்றி அடைந்து உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

ஆனால் தீவிரவாதி ஒருவர் மரணம் அடைவது கூட எனக்கு வலியை தருகிறது. அவர்கள் அனைவரும் வன்முறையை கைவிட்டு பொது வாழ்க்கைக்கு மீண்டும் வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்