தேசிய செய்திகள்

தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்

தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள துவாரகா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஆதர்ஷ் சாஸ்திரி. டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் போட்டியிட ஆதர்ஷ் சாஸ்திரிக்கு கட்சி மேலிடம் சீட் கொடுக்க மறுத்துவிட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த ஆதர்ஷ் சாஸ்திரி, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி நேற்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவர் மீண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சீட் கொடுக்க தலைமை மறுத்து விட்டதால் மற்றொரு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஜக்தீப் சிங் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். இவர் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலி தளம் கட்சியில் இணைய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...