பெங்களூரு,
பெங்களூரு ராமமூர்த்தி நகரில் 26 வயதான கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் வசித்து வந்தார். இவர் மங்களூருவை சேர்ந்தவர். இந்தநிலையில் பெண் என்ஜினீயர் கடந்த மாதம் 16-ந் தேதி அவர் குடியிருந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். படுக்கை அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்து இருந்தது. அதனால் முதலில் போலீசார் அவர் தற் கொலை செய்து கொண்டதாக சந்தேகித்தனர். பின்னர் அவ ரது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது.
அதன்படி விசாரணையை தொடர்ந்த போலீசார் பெண் என்ஜினீயரை கொலை செய்ததாக அவரது பக்கத்து வீட்டுக்காரரான குரேசி (வயது 18) என்ற வாலிபரை கைது செய்து விசாரித் தனர். அதில் பெண் என்ஜினீயர் குரேசியை பார்க்கும் போது சிரிப்பாராம். இதன்காரணமாக தன்னை பெண் என்ஜினீயர் காதலிப்பதாக குரேசி கருதியுள்ளார். இதனால் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது மறுப்பு தெரிவித்ததாகவும், அப்போது தள்ளிவிட்டதில் ஷோபாவில் தலை மோதி பெண் என்ஜினீயர் இறந்துபோனதாகவும் குரேசி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடர்ந்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. சம்பவத் தன்று குரேசி பெண் என்ஜினீயர் தங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். பின்னர் அவர், பின்னால் இருந்து பெண் என்ஜினீயரை இறுகப் பிடித்து பாலியல் பலாத்கா ரம் செய்ய முயன்றுள்ளார். இதில் இருந்து தப்பிக்க முயன்ற அவரை குரேசி கீழே தள்ளிவிட் டுள்ளார்.
அதில் பெண் என்ஜினீயரின் தலை வீட்டில் இருந்த சோபாவில் மோதி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். ஆனாலும் விடாத குரேசி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். பெண் என்ஜினீயர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால் அவர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி அந்த துணிகளை தண்ணீரில் கழுவியுள்ளார்.
அதன்பிறகு பீரோவில் இருந்த மற்றொரு உடையை எடுத்து அவருக்கு அணிவித்து உள்ளா டைகளை படுக்கையறையில் இருந்த கட்டிலில் மறைத்து வைத்துள்ளார். இதற்கிடையே பெண் என்ஜினீயர் உயிரிழந்துள்ளார். பெண் என்ஜினீயர் பிணமான பிறகும் குரேசியின் பாலியல் வக்கிர ஆசைவிடவில்லை. அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர், கொலையை மறைக்க தடயங்களை அழிக்க படுக்கை அறைக்கு தீவைத்துள்ளார். அத்துடன் பெண் என்ஜினீயரின் செல்போனை தூக்கிச் சென்றுள்ளார். இதனால் அவர் போலீசில் சிக்கியதும் தெரியவந்துள்ளது.
ஒட்டு மொத்தத்தில் 18 வயது மாணவனின் சல்லாபத்துக்கு ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.