தேசிய செய்திகள்

பெண் ஐ.ஆர்.எஸ். அதிகாரி, ஆணாக மாறினார்

இந்திய சிவில் சர்வீசஸ் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

ஐதராபாத்,

ஐதராபாத்தில் உள்ள மத்திய சுங்க கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வருபவர் அனுசுயா. 35 வயதான இந்த பெண் அதிகாரி, அரசாங்க ஆவணங்களில் தனது பெயரையும், பாலினத்தையும் ஆணாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் விருப்பம் தெரிவித்தார்.'எம்.அனுகதிர் சூர்யா' என்று தனது பெயர் மாற்றப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், அவரது வேண்டுகோளை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. எம்.அனுசுயா, இனிமேல் அரசாங்க ஆவணங்களில் 'எம்.அனுகதிர் சூர்யா' என்று குறிப்பிடப்படுவார் என்றும், ஆணாக கருதப்படுவார் என்றும் கூறியுள்ளது.

இந்திய சிவில் சர்வீசஸ் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு