ராய்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள டூல்ட் மற்றும் மின்பா காட்டுப் பகுதிகளில் நக்சல் பயங்கரவாத அமைப்பச் சேர்ந்தவர்கள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடத்தது. இதனையடுத்து சத்தீஸ்கர் காவல்துறையினரும், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரும் அந்த பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நக்சல் குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் மாநில ஐ.ஜி. பி.சுந்தர்ராஜ் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் துப்பாக்கி, பெரிய அளவிலான வெடிபொருள்கள் மற்றும் முகாம் பொருள்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.