தேசிய செய்திகள்

நவீன எந்திரம் மூலம் நெல் நடவு செய்த பெண் அதிகாரி

நவீன எந்திரம் மூலம் ஒரே ஆளே விவசாய நிலத்தில் நெல் நடவு செய்ய முடியுமென அதிகாரி கூறினார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக இருப்பவர் நந்தினி. நேற்று முன்தினம் மண்டியா மாவட்ட பஞ்சாயத்து, வேளாண் துறை இணைந்து ஹோலாலு கிராமத்தில் நவீன எந்திரம் மூலம் நாற்று நடுவது தொடர்பாக பயிற்சி முகாம் நடந்தது. இதில் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி நந்தினி கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர், சேற்று வயலில் இறங்கி நவீன எந்திரம் மூலம் நாற்று நட்டார். பின்னர் அவர் பேசுகையில்,

பெண்கள் நெல் நடவு எந்திரங்களை பயன்படுத்த முடியாது, எந்திரங்களை பராமரிக்க முடியாது என்ற எண்ணத்தை போக்க, நானே வயலில் இறங்கி நவீன எந்திரம் மூலம் நெல் நடவு செய்தேன். சமீபகாலமாக நெல் நடவு பணிக்கு விவசாய கூலி தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இதன்காரணமாக சரியான நேரத்தில் நடவு செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இனிமேல் விவசாய கூலி தொழிலாளர்களை நம்பி விவசாயிகள் இருக்க வேண்டாம். நவீன எந்திரம் மூலம் ஒரே ஆளே விவசாய நிலத்தில் நெல் நடவு செய்ய முடியும். இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து