தேசிய செய்திகள்

தெலுங்கானா மாநிலத்தில் பெண் வக்கீல் கற்பழிப்பு புகார்: நீதிபதி கைது

தெலுங்கானா மாநிலத்தில் பெண் வக்கீல் கற்பழிப்பு புகார் தொடர்பாக நீதிபதி கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம், சூரியபேட்டையில் 29 வயதான பெண் வக்கீல் ஒருவரை கற்பழித்ததாக சத்திய நாராயணராவ் (28) என்ற சிவில் நீதிபதி மீது புகார் எழுந்து உள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பெண் வக்கீல் அளித்த புகாரில், நீதிபதி தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து, செக்ஸ் உறவு வைத்துக்கொண்டு விட்டு, இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு நிச்சயதார்த்தம் செய்து உள்ளதாக கூறி உள்ளார்.

இந்த புகாரின்மீது போலீசார் கற்பழிப்பு தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவு மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து சிவில் நீதிபதி சத்தியநாராயணராவை நேற்று கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது