தேசிய செய்திகள்

வேலியே பயிரை மேய்ந்தது; புகார் அளிக்க சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

மங்களூரு,

கர்நாடகாவின் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் வசிக்கும் சிறுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கடபா காவல் நிலையத்திற்கு பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க சென்றுள்ளார்.

இதன்பின்னர், அந்த காவல் நிலையத்தின் கான்ஸ்டபிள் சிறுமியின் வீட்டுக்கு செல்ல தொடங்கியுள்ளார். இதன்பின்னர் அந்த சிறுமியை கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.

எனினும், சிறுமி கர்ப்பமடைந்த பின்னரே இதுபற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுமியின் தந்தை, கான்ஸ்டபிளிடம் தனது மகனை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

போலீசாரிடம் அளித்த புகாரை தொடர்ந்து கான்ஸ்டபிளை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என போலீஸ் சூப்பிரெண்டு சோனவானே ரிஷிகேஷ் பகவான் தெரிவித்து உள்ளார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு