தேசிய செய்திகள்

நிதி பகிர்வு அறிக்கையை குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்த 15-வது நிதி ஆணையம்

நாட்டின் 15-வது நிதி ஆணையம் வழங்கிய 2021-22 முதல் 2025-26ம் ஆண்டுக்கான நிதி பகிர்வு அறிக்கையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பெற்று கொண்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டின் 15-வது நிதி ஆணையம் அதன் தலைவர் என்.கே. சிங் தலைமையில் செயல்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மத்திய வரிகளை பகிர்ந்து அளிப்பது பற்றி இந்த ஆணையம் பரிந்துரை வழங்கும்.

இதன்படி 14வது நிதி ஆணையம், மத்திய வரி வருவாயில் 42 சதவீதம் அளவுக்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இது அதற்கு முந்தைய நிதி ஆணையத்தின் பரிந்துரையை விட 10 சதவீதம் கூடுதல் ஆகும்.

இந்நிலையில் 15வது நிதி ஆணையம், 2020-21ம் ஆண்டுக்கு மத்திய வரியில் 41 சதவீதம் அளவுக்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. இதில் குறைக்கப்பட்ட ஒரு சதவீதம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

எனினும், சமீப ஆண்டுகளில் நிதியாணைய பரிந்துரைக்கு குறைவாகவே மாநிலங்களுக்கு நிதி பகிர்வு இருந்து வருகிறது.

இந்த நிலையில், என்.கே. சிங் தலைமையிலான நிதி ஆணையம் தயாரித்த, வருகிற 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டுகளுக்கான அறிக்கையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பெற்று கொண்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை