தேசிய செய்திகள்

'பூமி திருத்தி உண்’- பட்ஜெட்டில் ஒலித்த ஆத்திச்சூடி

நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அவ்வையாரின் பாடலை சுட்டிக்காட்டி பேசினார்

தினத்தந்தி

புதுடெல்லி,

2020 - 2021 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின் போது, விவசாய வளர்ச்சி தொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசினார்.

அப்போது பூமி திருத்தி உண் என்ற ஆத்திச்சூடி வரியை மேற்கோள் காட்டி பேசினார். பூமி திருத்தி உண் என்ற 3 வார்த்தைகளில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அவ்வையார் கூறியுள்ளார் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

"பூமி திருத்தி உண்" என்ற ஆத்திச்சூடி பாடலுக்கு விளைநிலத்தை உழுது அதில் பயிர் செய்து உண் என்பது பொருள். இதனை முக்கிய நோக்கமாக கொண்டு மோடி அரசு செயல்படுவதாகவும் நிர்மலா கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை