புதுடெல்லி,
மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவிய போது ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது, லஞ்சப் புகாரின்பேரில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.
இதனையடுத்து தனக்கு எதிரான எப்.ஐ.ஆர்.ஐ ரத்து செய்ய வேண்டும் என்று ராகேஷ் அஸ்தானா டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது எப்.ஐ.ஆர்.ஐ ரத்து செய்வதற்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிரான வழக்கில் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. பல்வேறு தவறுகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிறரது தொடர்பு தொடர்பாக விசாரணையின் கீழ் உள்ளது. சில ஆவணங்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கண்காணிப்பின் கீழ் உள்ளது, எனவே விசாரணையில் எங்களுக்கு கட்டுப்பாடு உள்ளது, என்று கூறியுள்ளார்.