பெங்களூரு,
கர்நாடகாவில் பெங்களூரு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளராக இருப்பவர் முகமது ஹாரீஸ் நாலபத். இவர் பெங்களூருவில் உள்ள உணவு விடுதி ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறில் ஒருவரை அடித்துள்ளார். அவருடன் சென்றவர்களும் அந்நபரை தாக்கி உள்ளனர்.
இதனால் காயம் அடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் நாலபத் மற்றும் அவருடன் சென்றவர்கள் மருத்துவமனையில் வைத்தும் காயமடைந்த நபரை அச்சுறுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நாலபத் மற்றும் 10 பேர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், நாலபத் கட்சியில் இருந்து 6 வருடங்களுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். இந்த உத்தரவை கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரமேஷ்வரா வெளியிட்டு உள்ளார்.