பிவாண்டி,
மராட்டியத்தில் தானே நகரில் பிவாண்டி பகுதியில் உள்ள அன்சாரி என்ற திருமண மகாலில் திடீரென நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றன.
இந்த தீ விபத்தில் பல வாகனங்கள் எரிந்து விட்டன. எனினும் இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தானே மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.