தேசிய செய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், நோயாளிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் எண்டோஸ்கோபி பிரிவு அமைந்துள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து அந்த தளத்தில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். கொழுந்து விட்டு தீ எரிந்ததால் கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும்  8 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு