புதுடெல்லி,
புதுடெல்லியில் பெரோஸ் ஷா சாலையில் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. பி. ஸ்ரீராமுலுவின் இல்லம் அமைந்துள்ளது. இந்த நிலையில் இவரது வீட்டின் படுக்கையறையில் உள்ள சோஃபா ஒன்று இன்று காலை 5.50 மணியளவில் தீப்பிடித்துள்ளது.
தகவல் அறிந்து உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்றன. அதன்பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த தீ விபத்து சம்பவத்தில் எம்.பி.யின் குழந்தைகளுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.