இதனை தொடர்ந்து காலை 10.20 மணியளவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. அதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை அணைப்பதற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
இந்த கட்டிடத்திற்குள் 4 முதல் 5 பேர் இருந்துள்ளனர். அவர்களை ஏணியின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை.