தேசிய செய்திகள்

ஓடும் காரில் 'தீ'; டிரைவர் உயிர் தப்பினார்

பெங்களூரு கப்பன்பார்க் அருகே ஓடும் காரில் தீ பிடித்து எரிந்ததில் டிரைவர் உயிர் தப்பினார்.

பெங்களூரு:-

பெங்களூரு கப்பன்பார்க் அருகே சி.டி.ஓ. சர்க்கிளில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் முன்பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. இதை பார்த்து டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே சுதாரித்து கொண்ட அவர், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு கீழே குதித்தார். அதற்குள் காரின் ஒரு பகுதியில் பிடித்த தீ அனைத்து பகுதிகளுக்கும் பரவி எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து காரில் பிடித்த தீயை அணைத்தார்கள். காரின் பேட்டரியில் இருந்து தீப்பிடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரில் தீப்பிடித்ததும் டிரைவர் கீழே குதித்து விட்டதால், அவர் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார். இதுகுறித்து கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை