தேசிய செய்திகள்

மராட்டியத்தில் தீ விபத்து: 7 பேர் பலி; 10 பேர் மாயம்

மராட்டியத்தின் புனே நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

புனே,

மராட்டியத்தின் புனே நகரில் கொட்டாவடே படா என்ற பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் இன்று திடீரென பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

அந்நிறுவனத்தில் 37 பேர் பணியில் இருந்துள்ளனர். தீ விபத்து பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். இதுவரை 20 பேரை மீட்டு உள்ளனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மீட்பு பணியும் தொடர்ந்து வருகிறது என தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்