தேசிய செய்திகள்

பட்டாசு வெடிப்பு பற்றிய உத்தரவை மீறியதாக புகார்: சுப்ரீம் கோர்ட்டில் 12-ந் தேதி அவமதிப்பு வழக்கு தாக்கல்

பட்டாசு வெடிப்பு பற்றிய உத்தரவை மீறியதாக புகார் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் 12-ந் தேதி அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை முறையாக பின்பற்றவில்லை என்றும், அதேபோல விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பல மாநிலங்களின் காவல்துறை தவறிவிட்டது என்றும் பல தரப்புகளில் புகார் எழுந்துள்ளது.

மேலும், டெல்லியில் மட்டுமே 643 விதிமீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. குறிப்பாக, உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் தீபாவளியின் போது கட்டுப்பாடின்றி பட்டாசு வெடிக்கப்பட்டது.

எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை முறையாக அமல்படுத்தாத மாநில அரசுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரிய சுற்றுசூழல் ஆர்வலர் சுபாஷ் தத்தா சார்பில், வருகிற 12-ந் தேதி கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து