புதுடெல்லி,
டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்தினர். அவர்களை நோக்கி ஒரு வாலிபர் துப்பாக்கியால் சுட்டார். அதில் ஒரு மாணவர் காயமடைந்தார்.
அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் சிறுவன் என்று அவர் தரப்பில் கூறப்பட்டது. அவரை நேற்று சிறார் நீதி வாரியம் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் பாதுகாப்பு காவலில் வைக்க வாரியம் உத்தரவிட்டது. அவரது வயதை சரிபார்க்க எலும்பு பரிசோதனை நடத்த மருத்துவ குழுவை அமைக்குமாறு சிறார் நீதி வாரியத்தை போலீசார் கேட்டுக் கொண்டனர்.