தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளோரின் முதல் வீடியோ வெளியீடு

10-வது நாளாக இன்றும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தினத்தந்தி

டேராடூன்,

உத்தரகாண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.அங்கு கடந்த 12-ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கினர். அவர்களை மீட்க 8 அரசு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர். 10-வது நாளாக இன்றும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில், உத்தரகாண்ட் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களின் முதல் வீடியோ வெளியானது. சுரங்கப்பாதையில் 10 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இடிபாடுகள் வழியாக செலுத்தப்பட்ட 6 அங்குல குழாய் வழியாக கேமரா அனுப்பப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. எண்டோஸ்கோபி கேமரா மூலம் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை வீடியோ எடுத்துள்ளனர். 

மேலும் மீட்புக்குழுவினர் வாக்கி-டாக்கி மூலம் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளிகளுடன் பேசும் முதல் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்