தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: ராம்விலாஸ் பாஸ்வான்

சட்டசபை தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது. 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த நிலையில், ஆளுங்கட்சி மீது மக்களுக்கு இருந்த எதிர்ப்பு காரணமாகவே பாரதீயஜனதா தோல்வி அடைந்தது என்று தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

ராம்விலாஸ் பாஸ்வான் மேலும் கூறியதாவது: ஆளுங்கட்சி மீது மக்களுக்கு கோபம் இருந்த போதும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் பெற்றுள்ள வாக்கு சதவீதத்துக்கு சமமாக பா.ஜனதாவும் ஏறக்குறைய பெற்று இருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மோடி தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்