தேசிய செய்திகள்

டெல்லியில் இருந்து பாட்னா சென்ற விமானத்தில் கோளாறு

சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி உடனடியாக விமானத்தை டெல்லிக்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் 497 ரக விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு பாட்னாவிற்கு புறப்பட்டது. அப்போது வானில் பறந்த சிறிது தூரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி உடனடியாக விமானத்தை டெல்லிக்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கினார்.

இதனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் பாட்னா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்