தேசிய செய்திகள்

தாய்லாந்துக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் திடீர் கோளாறு; அவசரமாக டெல்லியில் தரையிறக்கம்

டெல்லி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு, விமானி அந்த விமானத்தை டெல்லிக்கு திருப்பி தரையிறக்கினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இருந்து தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகருக்கு இண்டிகோ விமானம் நேற்று காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்றது. நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது (ஹைடிராலிக் சிஸ்டம் செயலிழப்பு) தெரிய வந்தது.

இதையடுத்து விமானி அந்த விமானத்தை மீண்டும் டெல்லிக்கே திருப்ப தீர்மானித்தார். இது குறித்து டெல்லி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு, அந்த விமானத்தை அவசரமாக டெல்லிக்கு திருப்பி தரையிறக்கினார்.

இதனால் அந்த விமானத்தில் இருந்த பயணிகள், சிப்பந்திகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தனர். பின்னர் விமானத்தில் இருந்து அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு