தேசிய செய்திகள்

ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்: மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிப்பு

ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஒரு பிரிவினர் நேற்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை தரும் விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. விமான போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் விமான பயணிகள் சிலர் தங்கள் அசவுகர்யத்தை வெளியிட்டனர்.

ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறும் போது, நிலமையை மதிப்பிட்டு வருவதாகவும், விமான போக்குவரத்து இடையூறை சரி செய்யும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து