தேசிய செய்திகள்

ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம்: கேரள வாலிபர் கைது

இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளார். மேலும் அவர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

பெங்களூரு,

கேரள மாநிலம் பனமரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பிலகாவ் விலங்கும்புரம் பகுதியை சேர்ந்தவர் அஜினாப்(வயது 24). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளார். மேலும் அவர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், அந்த பெண்ணிடம் இருந்து விலக தொடங்கி உள்ளார். இதுகுறித்து அறிந்த பெண் உடனடியாக பனமரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதுகுறித்து அறிந்த அஜினாப், வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார்.

இந்த நிலையில் சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பிறகு அவர் வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டார். அவர் விமானம் மூலம் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வந்தார். முன்னதாக அஜினாப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு விமான நிலையம் உள்பட நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களுக்கு போலீசார் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து அஜினாப்பை கைது செய்தனர். பின்னர் அவரை கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்