புதுடெல்லி,
கேரள மாநிலம் சமீபத்தில் வரலாறு காணாத கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. தெடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கேரள மாநில அரசு வெள்ள நிவாரண பணிகளுக்காக ஜி.எஸ்.டி.யில் 1 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அனுமதி கோரியது. இதனை பீகார் துணை முதல்-மந்திரி சுஷில் மோடி தலைமையிலான ஜி.எஸ்.டி.க்கான மந்திரிகள் குழு ஏற்றுக்கொண்டு ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம் கேரள மாநிலம் 2 ஆண்டுகளுக்கு பேரிடர் வரியாக 1 சதவீத கூடுதல் வரி வசூலித்துக்கொள்ள முடியும்.