தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கவுகாத்தி,

பிரம்மபுத்திரா மற்றும் சாங் போ நதிகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக, தாழ்வான பகுதிகளில் வாழம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலபிரதேசம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. அதேபோல, அருணாச்சலப்பிரதேசத்திலும் ஓடும் சாங் போ என்று அழைக்கப்படும் சீயாங் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருணாச்சல பிரதேச மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு சீயாங் மாவட்ட நிர்வாகம் சார்பில் சீயாங் நதியில் மீன் பிடிப்பது மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது. சாங் போ நதியில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாகவும், இதனால் அருணாச்சல பிரதேசத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக சீனாவின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில், அஸ்ஸாமில் கொட்டித் தீர்க்கும் மழையின் காரணமாக தேசிய நெடுசாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரம்மபுத்திரா மற்றும் சாங் போ நதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நீர்வள ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு