தேசிய செய்திகள்

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு : லாலு பிரசாத் உள்பட 7 பேருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 7 பேருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளன. #FodderScam #LaluPrasadYadav

தினத்தந்தி

ராஞ்சி

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் சிலர் மீது ரூ.89.27 லட்சம் கால்நடை தீவன ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி சிவபால் சிங், லாலு பிரசாத் உள்பட 16 பேர் குற்றவாளி என கடந்த மாதம் 23-ந்தேதி தீர்ப்பளித்தார்.

அவருக்கான தண்டனை விவரம் கடந்த 3-ந்தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அன்று வழங்கப்படவில்லை. மறுநாளைக்கு (நேற்று முன்தினம்) ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் லாலு பிரசாத்தின் ஆதரவாளர்கள், நீதிபதிக்கு தொலைபேசி வழியாக மிரட்டல் விடுத்ததன் காரணமாக நேற்று முன்தினமும் தண்டனை விவர அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருந்த 11 பேரின் தண்டனைக்கான வாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேரின் தண்டனை விவரம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என நீதிபதி சிவபால் சிங் கூறினார்.

இன்று 4 மணிக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேரும் வீடியோ கான்பிரன்சிங் அறையில் கூடி இருந்தனர்.

லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட 16 பேரில் 7 பேருக்கு மூன்றரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

போல்சந்த், மகேஷ்பிரசாத், சுனில் குமார், சுசில் குமார், பேக் ஜுலியாஸ்,சுதிர்குமார்,ராஜாராம், ஆகியோருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், 5 லடசம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

#FodderScam #FodderScameVerdict #LaluLastJudgement #LaluPrasadYadav

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு