தேசிய செய்திகள்

ரோடியர் மில்லை தொடர்ந்து புதுச்சேரியில் மேலும் 2 மில்கள் இன்று முதல் மூடல்

புதுச்சேரியில் ரோடியர் மில்லை தொடர்ந்து மேலும் 2 மில்கள் இன்று முதல் மூடப்படுகின்றன.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரியின் அடையாளமாகவும், மாநில பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாகவும் ரோடியர், பாரதி, சுதேசி ஆகிய 3 பஞ்சு மில்கள் இருந்து வந்தன. இந்த மில்கள் கடந்த 20 ஆண்டுகளாக உற்பத்தி திறன் குறைந்து நலிவடைந்தன. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோடியர் மில் மூடப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்தது.

இந்த நிலையில் பாரதி மில், சுதேசி மில் ஆகியவையும் இன்று (புதன்கிழமை) முதல் மூடப்படுவதாக புதுச்சேரி அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

மில்களை சீரமைத்து செயல்படுத்தவும், ஆயத்த ஆடை பூங்கா அமைக்கவும் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போனதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை