தேசிய செய்திகள்

ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்ய ஆதார் கட்டாயம்: மத்திய அரசு

சட்ட விரோத மற்றும் கணக்கில் வராத பண பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் 'பான்கார்டு' கட்டாயமாக இருந்து வருகிறது. அதேநேரம் ஆண்டுக்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் இப்போது புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் பணபரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குடன் பான் மற்றும் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின் படி வங்கிகளில் ஒரே நேரத்திலோ அல்லது பல முறையோ, ஒரே வங்கியிலோ அல்லது பல வங்கிகளிலோ ஒரே கணக்கில் ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்வது கண்காணிக்கப்படும்.

சட்ட விரோத மற்றும் கணக்கில் வராத பண பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு