புதுடெல்லி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்திய தலைமை கணக்காயர் (சிஏஜி) தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறபட்டு உள்ளதாவது;-
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க கடன் வாங்கியதில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சிஏஜி தாக்கல் செய்துள்ளது. ஹெச்.டி.எப்.சி. வங்கியிடம் ரூ.1000 கோடி கடன் வாங்கியதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. வங்கியில் கடன் பெற்று அணுமின் நிலையம் உரிய நேரத்தில் அமைக்கப்படாததால் அரசுக்கு இழப்பு. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க கால தாமதம் ஏற்பட்ட காரணத்தினால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவோ, சரிசெய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1, 2-ஆவது அணு உலைகள் அமைக்க தாமதமானதால் அரசு ரூ.449 கோடி கூடுதல் வட்டி செலுத்த நேரிட்டது.
எதிர்வரும் காலத்தில் மேலும் அணு உலைகள் அமைக்கும் பணிகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டால் கடனை திருப்பி செலுத்துவதில் கால அவகாசம் தேவைப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.