புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்திய விமான தொழில்துறை ரூ.25 ஆயிரம் கோடி முதல் ரூ.26 ஆயிரம் கோடிவரை நிகர இழப்பை சந்திக்கும் என்று தொழில் மதிப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ. கணித்துள்ளது.
அந்நிறுவனம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விமான எரிபொருள் விலை உயர்வும், பயண கட்டண உச்சவரம்பு உயர்வும் விமான நிறுவனங்களின் லாபத்துக்கு சவாலாக உருவெடுத்துள்ளன. அதனால், விமான தொழிலுக்கு ரூ.25 ஆயிரம் கோடி முதல் ரூ.26 ஆயிரம் கோடிவரை நிகர இழப்பு ஏற்படும்.
விமான நிறுவனங்களின் கடன் சுமை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக உயரும். நடப்பு நிதியாண்டில் இருந்து 2023-2024 நிதியாண்டு வரை விமான நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.47 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.