தேசிய செய்திகள்

புதுவையில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் பெண்கள் - முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒப்புதல்

புதுவையில் அரசு பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுவையில் ஆயிரத்து 60 அரசு பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. தீயணைப்புதுறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரி என மொத்தம் 75 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அனைத்து துறையிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில் தீயணைப்பு துறையில் மட்டும் வாய்ப்புகள் தரப்படுவதில்லை.

எனவே பெண்களுக்கும் தீயணைப்பு துறையில் வாய்ப்பு தர வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து ஒரு நிலைய அதிகாரி, 17 வீரர்கள் என மொத்தம் 18 இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முதல்- அமைச்சர் ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் புதுவையில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை