தேசிய செய்திகள்

மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக வெளியுறவுத்துறை செயலர் கோகலே அமெரிக்கா பயணம்

மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக வெளியுறவுத்துறை செயலர் கோகலே அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். தனது அமெரிக்க பயணத்தின் போது டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளை சந்திக்கும் கோகலே, வெளியுறவுக்கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை செயலரின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மார்ச் 11 முதல் 13 ஆம் தேதி வரை கோகலே அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார். இரு தரப்பு நலன்கள் குறித்து, இருநாடுகள் இடையே நடைபெறும் வழக்கமான உயர்மட்ட குழு ஆலோசனைதான் எனவும் வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்