தேசிய செய்திகள்

காரக்பூர் ஐ.ஐ.டி.யில் படிக்க வெளிநாட்டு மாணவர்கள் ஆர்வம்

காரக்பூர் ஐ.ஐ.டி.யில் படிக்க வெளிநாட்டு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தினத்தந்தி

காரக்பூர்,

இந்தியாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் போய் மேல்படிப்பு படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் மாணவர்கள் வந்து, மேல்படிப்பு படிக்க ஆர்வம் காட்டுகிற சூழ்நிலை கனிந்துள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் ஐ.ஐ.டி. என்னும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டபோது, முதலில் உருவான மேற்கு வங்காள மாநிலம், காரக்பூர் ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிக்க வெளிநாட்டு மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களை கவர்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்த ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்கள் நிதி உதவியுடன் பல்வேறு ஸ்காலர்ஷிப் (கல்வி உதவித்தொகை) திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த கல்வி உதவித்தொகை, வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதுநிலை பட்டப்படிப்பு, டாக்டர் பட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கு இந்த ஆண்டு வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 220 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

குறிப்பாக ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், நேபாளம், இலங்கை, வியட்னாம், லாவோஸ், லத்தீன் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசூலா ஆகிய நாடுகளில் இருந்து மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த ஐ.ஐ.டி.யில் 8 சதவீதம் வெளிநாட்டினர் அனுமதிக்கப்படுகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்