தேசிய செய்திகள்

டெல்லி பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் காலமானார்

டெல்லி பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் மங்கே ராம் கார்க் இன்று காலமானார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி பா.ஜ.க.வின் முன்னாள் தலைவராக இருந்தவர் மங்கே ராம் கார்க். டெல்லியின் அசோக் விகார் பகுதியில் வசித்து வந்த இவர் கடந்த 1958ம் ஆண்டு பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார்.

கடந்த 1983ம் ஆண்டில் நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதன்பின் சட்டசபை தேர்தலில் மூன்று முறை போட்டியிட்டு உள்ளார். எனினும், கடந்த 2003ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஒரே ஒரு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கட்சியில் பொருளாளர், மாவட்ட தலைவர் போன்ற பல பொறுப்புகளை வகித்துள்ள கார்க் கடந்த 1997ம் ஆண்டு அக்கட்சியின் டெல்லி மாநில தலைவரானார். இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 81. அவரது மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை