மும்பை,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவரான கிருபாசங்கர் சிங் மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள பா.ஜ.க.வின் தலைமையகத்தில் இன்று அக்கட்சியில் இணைகிறார். அவர் மராட்டியத்தின் முன்னாள் மந்திரியாகவும் இருந்துள்ளார்.
இதுபற்றி பா.ஜ.க. மராட்டிய தலைவர் மாதவ் பண்டாரி கூறும்போது, மும்பை அரசியலில் உள்ள சிங், கடந்த சில மாதங்களாக கட்சியுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் அவர் பா.ஜ.க.வில் இணைகிறார் என தெரிவித்து உள்ளார்.