தேசிய செய்திகள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு உடல்நல குறைவு; ராஜஸ்தான் வருகை ரத்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உடல்நல குறைவால் ராஜஸ்தான் வருகையை இன்று ரத்து செய்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானின் ஆல்வார் நகருக்கு இன்று வருகை தர திட்டமிட்டு இருந்துள்ளார். அவர் கட்சியின் நேத்ராத்வ சங்கல்ப சிவிர் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால், தனது ராஜஸ்தான் வருகையை அவர் இன்று ரத்து செய்துள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ராகுல் காந்தியின் சகோதரி மற்றும் கட்சி பொது செயலாளரான பிரியங்கா காந்திக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்